வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!! அந்த 9 பேர் யார்..?
மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
திண்டுக்கல்லில் ம.திலகபாமா,
அரக்கோணத்தில் கே.பாலு,
ஆரணியில் அ.கணேஷ் குமார்,
மயிலாடுதுறையில் ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சியில் ரா. தேவதாஸ்,
தருமபுரியில் அரசாங்கம்,
சேலத்தில் அண்ணாதுரை,
விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..