தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், டிசம்பர் 31ம் தேதி 90000 காவல்துறையினரும் 10000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பிணையில் இருப்பார்கள் என்று டீஜி பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் .
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி வரும் நிலையில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்த நிலையில் காவல் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், 31ம் தேதி இரவில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் கொண்டாடபட கூடாது, மற்றும் புத்தாண்டு அன்று மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டவோ சாகசம் செய்யவோ கூடாது மீறினால் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், வழிபாடு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அங்கு குழப்பங்கள் விளைவிக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்கரை பகுதிகளில் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விபத்துகள் இல்லாத புத்தாண்டை கொண்டாட தமிழ்நாடு காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று டீஜி பி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.