கூகுளின் ஆல்பாபெட் சிஇஓவாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது பனி நிமித்தமாக இந்தியா வந்துள்ளார். அப்பொழுது அவர் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஒரு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு பொது வெளியில் சுற்றியதாக புகை படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலகின் முன்னனி கம்பெனியின் முன்னணி பதவியில் இருக்கும் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை தற்போது சில காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளார். அதை தொடர்ந்து அவர் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து அவர் சமீபத்தில் பெற்ற பத்மபூஷண் விருதுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கூகிள் நிறுவனத்தின் பல் புதிய திட்டங்களை இந்தியாவில் தொடங்கிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் அவர் தற்போது தமிழகம் வந்துள்ளதாகவும் அவர் மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்களின் சிற்பங்களை கண்டு ரசித்ததாகவும் பல புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு டி ஷார்ட் அணிந்து கொண்டு தொப்பி,மாஸ்க் மற்றும் ஒரு கண்ணாடி நைந்து கொண்டு பொது வெளியில் பொது மக்களுடன் அவர் நடமாடும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. மேலும் அவர் தனது சொந்த அடையாளங்களை மறைத்து உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தின் பல்லவர் கால கோவில், சிற்பங்களை ரசித்துள்ளார் இது தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளது.