அலர்ஜி தும்மலுக்கு தீர்வு..!!
தூசி அல்லது நெடி மிகுந்த பகுதியில் இயல்பாகவே பலருக்கும் தும்மல் வரும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் வரும், அதற்கு காரணம் அலர்ஜி.
அலர்ஜி தும்மல் ஆனது ஒவ்வாமையால் ஏற்படுகிறது. மூக்கின் உள்ளே உள்ள சவ்வில் வீக்கம் ஏற்பட்டால் இந்த அலர்ஜி தும்மல் ஏற்படும். இதனை அலர்ஜிக் ரைனிட்டிஸ் என்று அழைப்பார்கள். இது அழற்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி சைன்ஸ் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது.
மூக்கின் உள்ளே இருக்கும் குருகெலும்புகள் வீங்கி இருப்பதால். சவ்வும் வீங்கி விடும். இதனால் அலர்ஜியை ஏற்படுத்தும்.
இதனை சரி செய்ய மூக்கிற்கு பயன் படுத்தப்படும் நேசல் ஸ்ப்ரே உபயோகிக்கலாம். அல்லது ஸ்டீராய்டு மருந்துகள் பயன் படுத்தலாம் , இதிலும் சரியாக வில்லை என்றால் மட்டும் மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும்.
முக்கியமாக ஆஸ்துமா அல்லது அலர்ஜி சிகிச்சை மருத்துவரை, பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சை மருத்துவர். “ஸ்ரீ தரன்” கூறினார்.
வெ.லோகேஸ்வரி