கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகை அனிகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன்பின் ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்தின் மகளாக நடித்ததால், இவரை அஜித்தின் ‘ரீல் மகள்’ என்று அழைத்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக கேரளா மற்றும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அனிகா, இப்போது ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வந்தவர், இப்போது படுகவர்ச்சிக்கு தாவி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்தார் கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு ஹீரோயினாக வரவேற்பை பெற்று தந்துள்ளது. ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அனிகா, படுக்கை மற்றும் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடித்து விமர்சனக்களை வாரிக்குவித்துள்ளார்.
இதனிடையே அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.