பாஜக சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியீடு..!!
தமிழக பாஜக சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 30 பேர் கொண்ட பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்..
மேலும் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் வகையில் இன்னும் 9பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, மாநில துணை தலைவர் பி.டால்பின்தர், மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், துணை தலைவர் டாக்டர் கனகசபாபதி, தேசிய மின் நூலகத்துறை பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம்.நாச்சியப்பன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் டி.வரதராஜன் ஆகியோர் இடம் பெற்று இருப்பதாக அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..