இதை இருமாநில அரசுகளும் நிறுத்த வேண்டும்..!! ஜி.கே. வாசன் வலியுறுத்தல்..!!
கர்நாடகா அரசு வீண் வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை :
காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் விட்டுக்கொடுத்து நீரை பகிர்ந்து கொள்வதே சிறந்தது. ஆனால் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுத்துவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பகையை வளர்க்க வேண்டாம், தமிழ்நாடு அண்டை மாநிலம் தானே தவிர அண்டை நாடு அல்ல. கர்நாடகா அரசு வீண் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை வளராமல் இருக்க, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…
Discussion about this post