15 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..
தேனி, நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று மற்றும் நாளை கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..