காவிரி ஆற்றில் இறங்கி நாலாவது முறையாக கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 35நாட்களாக விவசாய பொருட்களுக்கு இரட்டிப்பான விலைக்கு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று காவிரி ஆற்றில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்,
பயிர்களை காப்பாற்ற மாநில அரசு உதவ முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் உள்ள காந்தி படித்துறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஒரு பகுதியாக கடந்த மூன்று முறை காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நான்காவது முறையாக மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக மத்திய அரசு கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆற்றின் நடுவே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர் தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதிதா லட்சுமி மற்றும் கோட்டை காவல்துறை ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுடன் நடந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு படகுடன்
வந்தபின் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு படகில் சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post