நினைத்ததை நிறைவேற்றும் மஹாகந்த சஷ்டி விரதம்…
சஷ்டி விரதம் கடைபிடிப்பவர்களுக்கு கந்தன் அருளால் திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம், நல்ல வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் கேட்ட அனைத்தும் நிச்சயமாக கைகூடும். மனநிறைவு, சந்தோஷம் உண்டாகும்.
சூரசம்ஹார அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு சாமி பூஜை அறையில் விளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார வணங்குங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிடைக்க அருள் வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
அவரவர் வீட்டில் இருக்கும் முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகம் எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானை மனம் ஒன்றி வணங்கி அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.
பிறகு உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது ஆகியவற்றை கொண்டு ஆறுமுகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்துவிட்டு, மலர்களால் அலங்காரப் படுத்திக்கொள்ளுங்கள்.
சஷ்டி பூஜை செய்யக்கூடிய இடத்தில் கோலம் போட்டுவிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைக்க வேண்டும்.
முருகன் படத்திற்கு முன்னால் சஷ்டி கோலம் போட்டு “”சரவணபவ”” என்று எழுத வேண்டும்.
ஆறு புதிய அகல் விளக்கை கொண்டு பொட்டு வைத்து நெய் ஊற்றி , தாமரை திரி போட்டு விளக்குகளை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகைய செய்து நறுமணம் கமழ செய்யுங்கள்.
உள்ளம் முழுவதும் அந்த மயில் வாகனனையே நினைத்தபடி புகழ்ப்பெற்ற கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
தீப ஆராதனை காட்டியபின் முடிந்த நிவேதனம் செய்யுங்கள். அன்று மாலை, வீட்டிற்கு அருகில் உள்ள ஆறுமுகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அன்றைய விரதத்தை முடித்து கொள்ளுங்கள்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.