2 ஆண்டுக்கு பின் மீண்டும் விசாரணை…!! 17 ஆண்டுகள் சிறை தண்டனை..!!
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அரியலூா் மாவட்டம் விளாகம் கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சத்தியராஜ் (வயது 25) இவா், கீழகொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்., அதற்கு அந்த பெண் மறுத்ததால் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த பெண் காணமல் போனதையடுத்து ஊரெங்கும் தேடியுள்ளார்., பின்னர் அந்த பெண் மறுநாள் உடலில் காயங்களுடன் வந்துள்ளார்., இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய் இதை பற்றி கேட்டபோது., சத்தியராஜ் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார்., அதனை அடுத்து பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் சத்தியராஜை காவலர்கள் கைது செய்து அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர் செய்தனர். அப்போது அந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. தற்போது அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபா், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சத்தியராஜிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தார். இதையடுத்து, சத்தியராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..