ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்திற்கு உத்திரவாதம்..!
கட்டாய உழைப்பு., உழைத்தால் உயர்வு தரும் என பழமொழி இருந்தாலும் கூட பலரும் உழைப்பதற்கு முன் வரவில்லை என சொல்லலாம் அதாவது என்ன தான் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட உடல் ஒத்துழைப்பு தரவில்லை என சொல்லுவாங்க.., ஆனா இந்த கட்டாய உழைப்பின் அவசியம் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்..
பிரெஞ்சு காலனிகளில் அடிமைநிலையில் இருந்து விடுதலையான போதும் கருப்பர்களின் நிலை 1946 ஆம் ஆண்டு வரையிலும் அல்லது காலனிகள் சுதந்திரம் பெற்ற காலம் வரையிலும் கட்டாய உழைப்பு இருந்தது. தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அணி திரட்டலும், தீவிரமான சமூக போராடடங்களும் பிரான்சின் நகரங்களில் புதிய விதிமுறைகள் விரைவாகச் செயல்படுத்தப்படுவது சாத்தியமாக்கப்பட்டது..
பிரான்சில் 1841இல் குழந்தை தொழிலாளர் சட்டங்களும், 1884இல் தொழிற்சங்கம் அமைப்பை அனுமதிக்கும் சட்டமும், 1898இல் வேலைதள விபத்துகள் குறித்த சட்டமும், 1919இல் மாநாடுகள் கூடுவது மற்றும் எட்டுமணி நேர வேலை நாளுக்கான சட்டமும், 1936இல் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கான சட்டமும், 1945இல் சமூக பாதுகாப்பிற்கான சட்டமும் நிறைவேற்றப் பட்டன.
நிரந்தரச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதும், முழுமையான சம்பளம் வாங்குவோர் சமூகம் என்பது உருவானதும் நாகரீகப் பண்புகளில் பெரும் முன்னேற்றத்தை கொடுத்தது.
ஆனால் அவை படிப்படியாகத்தான், பல வடிவங்களில், மிக நீண்ட காலப் போக்கில்தான் விளைந்தன. எடுத்துக்காட்டாக, நாள் அல்லது வாரச் சம்பளம் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் மாதாந்திரச் சம்பளம், 1969-1977 வரையிலும் உருப்பெறவில்லை. எனினும் இந்த வளர்ச்சி பகுதியளவுக்கு அரசியல், பொருளாதாரம் சார்ந்த அதிகார உறவுகளைப் பொறுத்து மாற்றம் பெறக்கூடியது என்பதையும் நாம் அறிவோம்.
இந்த கட்டாய உழைப்பின் மூலம் நம் சம்பள உயர்வு., பதவி உயர்வு., சமுகத்தில் அந்தஸ்து என அனைத்தும் கிடைக்கும்., ஆனால் அதை செய்ய முற்படும் போது தான் சிறிது சோம்பேறி தனம் வந்து தொந்தரவு செய்கிறது என சொல்லலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..