தூத்துகுடியில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி பேரணி..!!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 5வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு தின பேரணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தழிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகர திமுக செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலையிலும் அமைதி ஊர்வலம் துவக்கியது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து மாவட்ட கழக அலுவலகம் உள்ள எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் நிறைவுபெற்றது.
அங்கு அலங்கரிக்ப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தழிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்ப்பட்டோர் பேரணியில் பற்கேற்று கலைஞர் கருணாநிதியின் அலங்கரிக்ப்பட்ட படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Discussion about this post