தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இரண்டாவது மாடியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேல் அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று காலை 11.54 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. அந்த இடத்திலிருந்து பயங்கரமான கறுப்புப் புகை வெளியேறியது. “அறையில் இருந்த அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post