தந்தையின் நினைவை பகிரும் எம்.பி.கனிமொழி..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள், இன்றைய நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கலைஞரின் மகளும் திமுகாவின் எம்.பியும் ஆன “கனிமொழி” ட்வீட் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தலைவர் கலைஞரின் சிந்தனைகள் அனைத்தும் காலங்களை கடந்து நம்மை வழி நடத்த கூடியவை எந்த காலத்திலும் அவரின் கருத்துக்கள் பொருந்தும் அவரை பற்றி நான் எடுத்த முதல் நேர்காணல்.
மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் ‘அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்’. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள்.
மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள். pic.twitter.com/D2FWWjUwQ5
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 30, 2021
என் அப்பாவின் சிந்தனைகள் அனைத்தும் காலங்கள் கடந்தாலும் எங்களை வழிநடத்தி செல்ல வைக்கும் வகையில் இருக்கும். எந்த காலத்திற்கும் பொருத்தமான வகையிலே அவரின் கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கும்.
இன்றைய அரசியல் சூழலில் கூர்மையான சூழல் நிலவி வருகிறது. பின் வரும் அரசியல் சூழல் பற்றி அவர் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.., அரசியல் மட்டுமின்றி பல கருத்துக்களையும் அவர் கூறியுள்ளார். எங்களை விட்டு நீங்கள் பிரிந்தாலும்.., எங்கள் மனதிலும் உங்களின் எழுத்துக்களின் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்
அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்
அவை நினைவுகளால்
நிரம்பி வழிகின்றன.#HBDKalaignar98#kalaingarforever pic.twitter.com/vax3teQhNX— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 2, 2021
என சற்று மன வருத்தத்துடன் எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Discussion about this post