“போலியோ இல்லாத உலகம்..” அசத்திய பள்ளி மாணவர்கள்..!! குவியும் பாராட்டு..!!
நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வுக்காக, ரோட்டரி சங்கம் சார்பில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற, உலக சாதனை சிலம்பம் போட்டி நடைபெற்றது.
போலியோ இல்லாத உலகை உருவாக்கும் நோக்கத்தில் சர்வதேச ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிகச்சில இடங்களில் போலியோ நோய் மீண்டும் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்ற இயக்கத்தை ரோட்டரி சங்கம் முன்னெடுத்து வருகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் 2980 மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில், போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட, சிலம்பம் பயிற்சி நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டை மேடு அருகில் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவுக்கு, ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றவாறு, இடைவிடாது தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றி பயிற்சியில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணிக்கு போட்டி முடிவுற்றது. உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்ற, இந்த சிலம்பப் போட்டியை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அங்கீகார சான்று அளித்தனர்.
ரோட்டரி மாவட்ட சிலம்பம் போட்டி திட்டத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் கருணாகரபன்னீர்செல்வம், பொருளாளர் செல்வரத்தினம், வல்வில் ஓரி சிலம்பம் அசோசியேசன் தலைவர் பன்னீர் மற்றும் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.”
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..