வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடருமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ் நாடு முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இதனால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்தது.
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் அறிவிப்பில், வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மேகமூட்டத்துல காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில்இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.