இந்திய சினிமாவின் உலகநாயகனான கமல்ஹாசன் தற்போது 70 வயதை நெருங்கி வருகிறார். தற்போதும் ஒரு இளைஞனை போல் பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரெனெ உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறார் மேலும் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை தன் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்தும் வருகிறார். இதை தொடர்ந்து அவரின் அரசியல் கட்சியின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத் சென்று சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
அவர் தொடர்ந்து பல நிகழ்வுகளில் ஓய்வின்றி பங்கு பெற்று வருவதால் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவர் இன்று சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்புவார் என்று அறிவித்துள்ளது. மேலும் கமல்ஹாசன் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post