வங்க கடலில்காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாகைகு 330 கிமீ தொலைவில் அந்த காற்றழுத்த தாளவு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாளவு பகுதி வலுப்பெற்று காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மணடலத்தால் மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்க்காரிகை கூட்னு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தினமான இன்றும் பரவலான மழை பெய்யா ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திலிருந்து 330 கிமீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாகவும் அதனை வேகம் மணிக்கு 8 கிமீ வேகத்தில் அதன் நகர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இலங்கை நாட்டில் அதீத காற்று வீசும் என்பதால் அங்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சின்ஹா காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.