நேற்று மாலை விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் தனது போட்டியாளரை பற்றி சுவாரஸ்யமாக கூறின குட்டி ஸ்டோரி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் நடித்துள்ள வாரி படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நேரு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் விஜய் உட்பட இயக்குனர் வம்சி, தமன், தில் ராஜு, சரத்குமார், ராஷ்மிகா மற்றும் அனிருத்,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜய் படத்தின் ஆடியோ லான்சில் விஜயின் குட்டி ஸ்டோரி மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். இந்நிலையில் நேரிட்டு விஜய் பேசுகையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அரசியல் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட நிலையில் அவர் குடும்பத்தையும், ரசிகர்களையும் மற்றும் அவரது போட்டியாளரையும் பற்றி பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
முதலில் அவரது குட்டி ஸ்டோரியில், குடும்பத்தை பற்றயும் அதன் சிறப்புகளை பற்றியும் பேசிய அவர் பிறகு அவரு விஜய் மக்கள் இயக்கம் செய்ய கூடிய ரத்த தானம் மற்றும் பல நற்செயல்களை பற்றி பேசினார். இறுதியில் அவரது போட்டியாளரை பற்றி பேசுகையில் அனைவரையும் ஆச்சர்யபடும் வகையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்தார். அதாவது, 1990ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். சிறிது நாட்களில் அவர் எனக்கு முக்கிய போட்டியாளராக மாறினார். அவரின் வெற்றியால் நானும் வேகமாக ஓட வேண்டியது இருந்தது. அவரை விட அதிகமாக ஜெயிக்கனுன்னு நினைத்தேன். எல்லோருக்கும் அப்டி ஒரு போட்டியாளர் தேவை என்று கூறியவுடன்
அனைவரும் அவரது போட்டியாளராகள் அஜித்தை தான் சொல்கிறார் என்று நினைக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் கூறியது, அந்த போட்டியாளரின் பெயர் ஜோசெப் விஜய் என்றும் உங்களுடன் நீங்கள் போட்டி போடுங்கள் என்றும் அவரது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். பிறகு அவர் பாடிய ரஞ்சிதமே பாடலை மேடையில் சிறிது நடனம் ஆடிய படியே அந்த பாடலை பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இவரது இந்த குட்டி ஸ்டோரி சமூகவலைத்தளங்களில் பெரிதும் வைலகை வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அவரது பேச்சை மற்றும் பாடலை கொண்டாடி வருகின்றனர்.