வயநாட்டிற்கு ராகுல் காந்தி வருகை..!! சூடு பிடித்துள்ள தேர்தல் களம்..!!
வயநாடு மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலானது வருகின்ற நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது.. அதற்காக வேட்புமனு தாக்கலாலானது கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது..
இந்த தேர்தலின் வாக்கு பதிவானது வருகின்ற நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது..
அதன்படி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.. மேலும் வயநாட்டில் இன்று தனது அடுத்த கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்..
மற்றும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அவர் வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்..
மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது சகோதரியும், கட்சியின் வேட்பாளருமான பிரியங்கா காந்தியை ஆதரித்து வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதேபோல் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது…
தற்போது வயநாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என சொல்லலாம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..