பல லட்சம் ரூபாய் விலை போகும் ராகுல்காந்தி ஷூ..! கூலித்தொழிலாளி சொன்ன பதிவு..!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சுல்தான்பூரில் சாலையோரமாக அதே பகுதியை சேர்ந்த “ராம் சேத்து” செருப்பு தைக்கும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.. தற்போது இவர் அனைத்து ஊடகங்களிலும் பேமஸ் ஆக என்ன காரணம் அதை விவரிக்கிறது.. இந்த பதிவு
கடந்த ஜூலை 26ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய வழக்கிற்காக சுல்தான்பூர் சென்றுள்ளார். அப்போது சுல்தான்பூர் சென்ற ராகுல்காந்தி சாலையோரத்தில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் பக்கத்தில் அமர்ந்து பேசியுள்ளார்.. அவரின் அந்த எளிமையான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுல்தான்பூர் சென்ற ராகுல்காந்தி சாலையோரத்தில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளியை கண்டதும்.., தனது வாகனத்தை நிறுத்தி செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேத்துவை சந்தித்து உங்களுக்கு ஏதேனும் உதவிகள் வேண்டுமா என கேட்டுள்ளார்.. அதற்கு அந்த தொழிலாளி உதவி எதுவும் வேண்டாம் சார்.. நீங்க என்னிடம் பேசியதே மிக சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்..
அப்போது ராகுல் காந்தி அவரிடம் காலணியை தைக்க கற்றுதரும் படி கேட்டுள்ளார்.. பின் ராகுல்காந்தி காலணி ஒன்றையும் தைத்துள்ளார். ராகுல்காந்தி அவரை சந்தித்த பின் அந்த கூலி தொழிலாளி தற்போது பிரபலமாகியுள்ளார். மேலும் ராகுல்காந்தி தைத்தை அந்த ஷூவை பலரும் விலைக்கு கேட்டு வந்துள்ளனர். ஆனால் ராம் சேத்து அதனை எவ்வளவு கொடுத்தாலும் விற்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து ராம் சேத்து கூறுகையில், “ராகுல்காந்தி வந்ததால் எனது உலகம் முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன் என்னை யாருக்கும் தெரியாது. இதே வழியில் ஆயிரம் கணக்கான வாகனங்கள் போகிறது வருகிறது.., ஒருவர் கூட என்னை பார்த்தது கிடையாது.. ஆனால் இன்று பலர் வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்., சில அரசு அதிகாரிகள் தேடி வந்து தொழில் முன்னேற்றத்திற்கு உதவி வேண்டுமா என கேட்கிறார்கள்.
மேலும் ராகுல்காந்தி தைத்த அந்த காலணியை பலரும் விலைக்கு கேட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக 10லட்சம் ரூபாய் வரை கேட்டனர்.., ஆனால் நான் அதனை விற்க மாட்டேன் . அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் நான் அதை பொக்கிஷமாக பார்த்துக்கொள்வேன் ” என கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..