வயநாடு எம்.பி.யாகும் ராகுல் காந்தி..!! மக்களவை செயலகத்தின் புதிய அறிவிப்பு..!!
காங்கிரஸ் மூத்த தலைவர் “ராகுல் காந்தி” வயநாடு எம்.பி.யாக மக்களுக்கு சேவை செய்வார் என மக்களவை செயலகம் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் “ராகுல் காந்தி“ மீண்டும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, “மோடி என்ற குடும்ப பெயரில் தான் அனைத்து திருடர்களும் இருக்கின்றார்கள்” என பேசிய அவரின் சொல் சற்று சர்ச்சையை கிளப்பியது. குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதன் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
விதிக்கப்பட்டது. மற்றும் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் கொடுத்து ஜாமீன் வழங்கியது. அதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு பக்கம் ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிபோனது.
நான்கு ஆண்டிற்கு பிறகு இன்று மக்களவை செயலகம் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் “ராகுல் காந்தி” மீண்டும் எம்.பி.யாக பதவி ஏற்கிறார். என அறிவிப்பு வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post