சென்னையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் சொல்லுக்கு ஏற்ப இன்று வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். சில கருத்துகளை வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நடிகர் விஜய் இடம் சொல்லப்போகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மாவட்டங்களுக்குள் பல அணிகள் பிரிக்கப்பட்டு இருந்தாலும், விஜய் மக்கள் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் அணி வழக்கறிஞர் அணி என்றும், சென்னையில் விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.