“இந்தியாவின் உண்மை நிலையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்றும் நாளையும் மாநாட்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் டெல்லிப் பகுதியில் வழி தோறும் உள்ள குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
இந்திய பாஜக அரசு நமது ஏழை மக்களையும் விலங்குகளையும் மறைக்கிறது.
இந்தியாவின் உண்மைநிலையை விருந்தினர்களிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
GOI is hiding our poor people and animals.
There is no need to hide India’s reality from our guests.
— Rahul Gandhi (@RahulGandhi) September 9, 2023