ஜி-20 மாநாட்டில் குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார் .
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக இன்று காலை விமான மூலம் முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இன்று இரவு குடியரசுத் தலைவர் அளிக்கவுள்ள விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில், கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திர நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க ஸ்டாலினை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்றார்.
Discussion about this post