தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி..!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த எம்பியுமான “ரா.சம்பந்தன் (வயது 91)” கடந்த ஜூன் 30ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து அவரது உடலை பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து தனி விமானம் மூலம் அரசு மரியாதையுன் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், தந்தை செல்வா கலையரங்கில் இருந்து கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலையில் 2 தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் குகதாசன், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது அவரது உடலுக்கு பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ