ஆம்ஸ்ட்ராங் படுகொலை..! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக தற்போது 8 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேர் அதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. தற்போது இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேரை காவல்துறையினர் 4 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறார்கள்..
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வழக்கை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்குச் தக்க தண்டனை வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..