தெலுங்கானவில் பி.ஆர்.எஸ் எம்பிக்கு கத்தி குத்து.!! வெளியான திடுகிடும் உண்மை..!!
நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு, அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தெலுங்கானாவை பொறுத்தவரை காங்கிரஸின் கை ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களுக்கும் பாஜக கட்சியினருக்கும் மோதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேரலை நிகழ்ச்சி விவாதத்தின் போது பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜக வேட்பாளரின் கழுத்தை நெறித்த கட்சி சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் தற்போது பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி பிரபாகர் ரெட்டிக்கு சித்தி பேட் மாவட்டத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..