தெலுங்கு சூப்பர்ஸ்டாரும் நடிகர் மகேஷ் பாபு வின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா உடல்நலக குறைவால் ஐதராபாத்தில் காலமானார். மூத்த நடிகரான கிருஷ்ணாவின் மரணத்திற்கு இந்தியா திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.
தெலுகில் சூப்பர்ஸ்டாராகவும், இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்த மூத்த நடிகர் மாரடைப்பு காரணமாக உரிழந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த கிருஷ்ணா அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் இயக்குனர், தயாரிப்பாளர் என்று 50 ஆண்டுகள் திரையுலகில் இயங்கி வந்தார்.ரஜினி,கமல், விஜயகாந்த், சூர்யா தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பலரும் தங்களின் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐதராபாத்தில் உலா அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சிரஞ்சீவி உட்பட பல நடிகர்கள் அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்