பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணம்..!! ஏன் தெரியுமா..?
3 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
இந்திய நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து 3 முறையாக ஆட்சி செய்து வரும் நிலை நேற்று அவர் தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்த நாளிற்கு அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முக்கியமாக அமெரிக்காவின் டெல்வாரா நகரில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம் பெற்றுள்ளன. 22ம் தேதி நியூயார்க்கில் இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடுகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். 23ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..