“எந்த சமரசமும் இன்றி சட்டப்போராட்டம்..” எம்.பி ஜோதிமணி பேட்டி..!!
பல மாதங்களாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர்கள் மற்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்..
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.. ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில்.., ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.. அதன் பின் அமலாக்கதுறை அதிகரிகள் காலம் தாழ்த்துவதால் 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு.,
செந்தில் பாலாஜியின் உடல்நலம் கருதி நேற்று நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. அவரது விடுதலையையொட்டி திமுக தொண்டர்கள் புழல் சிறைசாலை முன் குவிந்தனர்.. இதுவரை 58 முறை அவரது ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது..
விதிகப்பட்ட நிபந்தனைகள்., அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்,
25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் வரவேற்பையொட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.. அதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜியை திமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்..அப்போது திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து வரவேற்பு அளித்தனர்.
அவர்களை தொடர்ந்து கரூர் எம்.பி. ஜோதிமணியும் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னதாக, செந்தில் பாலாஜி வெளியே வந்தது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஜோதிமணி, “எந்த சமரசமும் இன்றி சட்டப்போராட்டம்” நடத்தி அவர் வெளியே வந்துள்ளார். அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..