டெல்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகை இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதிக்கப்படாத நிலையில் இன்று முதல் மாளிகையை சுற்றி பார்க்க அனுமதி.
குடியரசு தலைவரின் இருப்பிடமான ஜனாதிபதி மாளிகையை வருடத்திற்கு சில குறிப்பிட்ட தினங்களில் பொதுமக்கள் சுற்றி பார்த்து வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் கொரோனா தோற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த நடைமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது.
இன்று முதல் முதல்வரின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் ஜனாதிபதி மாளிகையை முன்பதிவு செய்து சுற்றி பாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து மற்ற தினங்களில் முன்பதிவு செய்து மாளிகையை சுற்றி பார்க்கலாம். தினமும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் குடியரசு தலைவரின் படைவீரர்கள் மாறும் நிகழ்வையம் பார்வையார்கள் முன்பதிவு செய்து கொண்டு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.