கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடித்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படமான டிமான்டி காலனி திரைப்படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிக பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#DemonteColony2 shoot begins!#DC2 #VengeanceOfTheUnholy@AjayGnanamuthu @SamCSmusic @priya_Bshankar pic.twitter.com/Jdr2CzbSGg
— Arulnithi tamilarasu (@arulnithitamil) November 30, 2022
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான முற்றிலும் வேறுபட்ட திரில்லர் படங்களிலுள் முதன்மையானது டிமாண்டி காலனி திரைப்படம் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இப்படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. பொதுவாக அருள்நிதியின் கதை தேர்வு எப்போதும் தனித்துவமானதாக இருக்கும் அவரின் படங்கள் ஒவ்வ்வொன்றும் புதிய கதையம்சத்தை கொண்டதாகவும் இருக்கும் இதனால் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றும் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் 7 வருடத்திற்கு முன் வெளியான டிமாண்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக அதிகார்வப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக விக்ரமை வைத்து இயக்க இருந்த நிலையில் கோப்ரா திரைப்படத்தின் தோல்வியால் அந்த திரைப்படம் கைவிட பட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் டிமாண்டி காலனி 2 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது இதனால் அஜய் ஞானமுத்து கம்பாக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.