சந்திரயான் 3 தரையிறங்கிய ‘சிவசக்தி’ புள்ளியை தலைநகராக உருவாக்க வேண்டும். அப்போதுதான், ஜிகாதி மனநிலையுடன் உள்ள பயங்கரவாதிகள் அங்கு செல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார். சக்ரபாணி மகாராஜின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோடா பயிற்சி மையங்கள் எடுத்திருக்கும் முடிவு இஸ்ரோ கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவரும் நிலவின் மேற்பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு உலக நாடுகள் பல பாராட்டுகளைத் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post