கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் வளர்ந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், மாநில திட்டக் குழு அலுவலகத்தில் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து , மாநில திட்டக் குழு அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் , மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் ஆகியோரது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்க இருக்கிறேன். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் உற்பத்தி மதிப்பில் நிலைத்து உள்ளது. 2021 -2022 ஆண்டுக்கான நிலைத்த விலை 13,43287 கோடியாகவும் நடப்பு விலையில் 1453321 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
அதே போல் 2022-2023 ஆண்டுக்கான நிலைத்த விலை 20,71,286 கோடியும்,
நடப்பு விலையானது 23,64,514 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் ஒன்றிய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது 2021- 22 நிலைத்த நிலையில் 9.0 சதவீதமாகவும் நடப்பு விலையில் 8.8% ஆகவும் காணப்படுகிறது.2022-23 ஆண்டுக்கான நிலைத்த விலை 9.1% ஆகவும் நடப்பு விலையில் 8.7 சதவீதமாகவும் காணப்படுகிறது. 2021 22 ஆம் ஆண்டின் அடுப்பு விலையில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய ஒன்றியத்தை இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் விதைத்த விலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகவும் திகழ்ந்து வருகிறது.
20223 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய மற்ற மாநிலங்களின் உற்பத்தி மதிப்பீடுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. நமது மாநில பொருளாதாரம் 2021-22 ஆம் ஆண்டில் நிலைத்த விலையில் 7.92 சதவீதம் அளவிலும் 2022-23 ஆம் ஆண்டில் 8.19 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்புவிலையில் வளர்ச்சியின் அளவு 15.84 சதவீதமாக 2021-22 ஆம் ஆண்டிலும் 14.16 சதவீதமாக 20223 ஆம் ஆண்டிலும் இருக்கிறது.
அதேபோல மாநிலத்தின் வளர்ச்சி விகிதமானது 2021 22 ஆம் ஆண்டில் நிலைத்த விலை 8.19 சதவீதமாகவும் நடப்பு விலையில் 15.84 சதவீதமாகவும், 2022 2023 ஆண்டுக்கான நிலைத்த விலை 7.9 சதவீதமாகவும் நடப்பு விலை கணக்கில் 14.8 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல் ஒன்றியத்தின் வளர்ச்சி விகிதமானது 2021-22 ஆம் ஆண்டுக்கான நிலைத்த விலை 9.5 சதவீதமாகவும் நடப்பு விலை கணக்கில் 18.36 சதவீதமாகவும், 2022-23 ஆம் ஆண்டுக்கான நிலைத்த விலை 7.24 சதவீதமாகவும், நடப்பு விலை 16.6% சதவீதமாகவும் உள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு வளர்ச்சி வேகம் பிடித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தனிநபர் ஆண்டு வருமானம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது,
அதற்கு 2 ஆண்டுகளில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் காரணம் என்றார்
மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்,
இலவச பேருந்து திட்டத்தின் மூலம் 900 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு செலவு குறைந்துள்ளது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்தது. அதேபோல் தான் காலை உணவு சிற்றுண்டி திட்டம் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்று ஆய்வு செய்த பிறகு தான் தெரியும். காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து மூன்று மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரம் கண்டறியப்படும்.