மலேசியாவில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது கணவனுக்கு விலை உயர்ந்த லம்போர்கினி காரை பரிசாக அளித்துள்ள சம்பவம் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
அனீஷ் ஆயுனி உஸ்மான் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அவரது டிக் டாக் கணக்கில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், அனீஷ் ஆயுனி உஸ்மான் தனது கணவரை கண் மூடி அழைத்து வந்து புது காரை காட்டுகிறார். இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் காணப்பட்ட கணவர், பரிசுக்கு நன்றி தெரிவித்து தனது மனைவியைக் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து அனீஷ் ஆயுனி உஸ்மான் கூறுகையில், பெற்றோரானவுடன் தனது கணவருக்கு காத்திருக்கும் நீண்ட, தூக்கமில்லாத இரவுகளுக்கான வெகுமதியாக இது என்று தெரிவித்தார். மேலும் வரும் மார்ச் மாத இறுதியில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த இளம் ஜோடி கடந்த 19, பிப்ரவரி 2021 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.