தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெறும். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை அளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.