சுவையான காரசாரம் நிறைந்த இறால் பிரியாணி..!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 500 கி
இறால் – 500 கி
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சை பழம் – 1/2
தயிர் – 1 கப்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லை – சிறிதளவு
அரைத்த முந்திரி
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
செய்முறை:
-
இறாலை நன்றாக கழுவி உப்பு மற்றும் மசாலாவை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த இறாலை வறுத்து எடுக்க வேண்டும்.
-
பொரித்து எடுத்தும் அதில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
-
அத்துடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
-
பின் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
-
பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, தயிர் கலந்து கிளறவும். பின் அரைத்த முந்திரியை சேர்த்து வதக்கவும்.
-
பொரித்து வைத்துள்ள இறால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
-
பின் ஊறவைத்த பிரியாணி அரிசியை சேர்த்து கலந்து தேவையான உப்பு இருக்கிறதா என்று செக் செய்து குக்கரை மூடி மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.
-
பின் ஆவி வெளியே இறங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.