கர்நாடக மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்த பொது எதிர்பாரத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இருக்கும் கட்கோலோ என்ற கிராமத்தின் வழியாக பிரதமரின் சகோதரரான பிரகலாத் மோடி, அவர் மகன் மேகுல் மோடி, மருமகள் ஜினாள், பேரன் மஹரத் மற்றும் டிரைவர் சத்திரநாராயணன் உள்ளிட்டோர் அவரது காரில் பயணித்தனர். சற்றும் எதிர்பாரத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த சாலையிலிருந்து டிவைடரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடக்கையில் அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்த அனைவரையும் மீட்டு அருகிலிருந்த மைசூர் ஜேஎஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தால் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.