துண்டிக்கப்பட்ட மின்சாரம்..!! பரிதவிக்கும் மக்கள்..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் காப்புக்ககாடு மலைகளின் அடிவாரத்தில் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் .இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற ஐந்து ஆடுகளை சிறுத்தை தாக்கியத்தில் இறந்துள்ளது. மேலும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு ஒன்று ஆட்டின் உரிமையாளர் கண் முன்னே சிறுத்தை தாக்க முயன்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் கால்நடைகளை மோய்ச்சலுக்காக கொண்டு செல்லவும் இரவு நேரங்களில் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை கத்துவதால் வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக உள்ளது என்கின்றனர். சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகில் உள்ள பேச்சாவடி என்னும் இடத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையத்தில் பவர் டிரான்ஸ்பார்மர் மற்றும் பிரேக்கர் பழுதாகி பலத்த சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த துணை மின் நிலையம் மூலமாக மின்சாரம் பெறக்கூடிய பேச்சாவடி சுற்றியுள்ள இடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உடனடியாக நாகப்பட்டின மின்வாரிய தலைமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் அவர்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
வேலூர் பேரணாம்பட்டு பஜார் வீதி வழியாக ஏரி குத்தி, கொத்தலப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதில் கடந்த ஒரு வாரமாக பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை தெரிவித்தும் அதை சரி செய்யவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம்திமிரி அடுத்த ஆனைமல்லூர் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தின் மேல் தளம் முற்றிலுமாக சிதலமடைந்து இடிந்து விழுந்து உள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் உறுதியற்ற நிலைமையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் பயிலுகின்ற அங்கன்வாடி மைய கட்டிடம் உறுதியற்ற நிலைமையில் செயல்பட்டு வரும் சம்பவம் பெற்றோர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை ஏற்ற ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள மின் கம்பிகள் அருகில் ஆபத்தான நிலையில் கொடிக்கம்பத்தின் உச்சியில் உள்ள வளையத்தில் தேசிய கொடியை ஏற்றும் கயிற்றை நுழைத்து கொண்டு வர அரசு துவக்கப்பள்ளி மாணவனை ஏற்றி விட்டுள்ளனர்.இந்நிகழ்வை அருகில் இருந்த சிலர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளத்தில்பதிவிட்டுள்ளனர். மின் கம்பம் மிக அருகில் உள்ள நிலையில் மாணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..