ஒரு மணி நேரத்தில் 15க்கும் மேற்பட்டவர்களை கடித்த வெறிபிடித்த நாய்கள்..!!
பேரணாம்பட்டில் வெறி நாய்கள் கடித்து மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் – மருத்துவமனையில் அனுமதி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
தற்போது வெறிநாய்கள் மனிதர்களை கடித்து அதனால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது..
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 12,17 வது வார்டு சுற்றுவட்டார பகுதிகளான திருவிக நகர், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை போன்ற சாலைகளில் செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு 7. மணியிலிருந்து 8 மணிக்குள் சுமார் 15க்கும் மேற்பட்டவர்களை தெருக்களில் சுற்றி திரியும் வெறிபிடித்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் கை கால்கள் போன்ற இடங்களில் கடித்து குதரி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த திருவிக நகரை சேர்ந்த அனீஸ் வயது 5, சாலப்பேட்டை பகுதியை சேர்ந்த கணேஷ் வயது 47, பூந்தோட்ட வீதியை சேர்ந்த சாந்தா வயது 60, ஏறிகுத்தி கிராமத்தை சேர்ந்த கோகிலா மற்றும் அவர் பிள்ளை தருண் வயது 8 உள்ளிட்ட சுமார் 15 பேரை நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அனைவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சொன்றதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை பெரும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. மேலும் நாய்கள் கடிபட்டு சிகிச்சை பெற்றவர்களை பேரணாம்பட்டு ஆர்.ஐ. சரவணன் கிராம நிர்வாக அலுவலர் துறை முருகன், கிராம உதவியாளர்கள் ஆசைதம்பி, அறிவழகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் உள்பட சுமார் 15 பேரை வெறி நாய்கள் கடித்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..