அட்டகாசமான பரோட்டா சால்னா…!
சின்ன வெங்காயம்
ஊறவைத்த கசகசா
ஊறவைத்த முந்திரி
ஊறவைத்த சோம்பு
தேங்காய்
பட்டை
மிளகு
ஏலக்காய்
கிராம்பு
தண்ணீர்
எண்ணெய்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,ஜாவித்ரி,அன்னாசிபூ,கல்பாசி,பிரியாணி இலை
வெங்காயம்
மிளகாய்
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
தனியா தூள்
அரைத்த விழுது
தண்ணீர்
புதியா,கொத்தமல்லி இலை
மசாலா விழுது அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை எல்லாம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்தது மசாலா வகைகளை எல்லாம் சேர்த்து புதினா,கொத்தமல்லி இலை மற்றும் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் அட்டகாசமான பரோட்டா சால்னா தயார்.