வெட்ட வெளியில் இரயில் நிலையத்தில் நாட்டு வெடி வெடித்த இளைஞருக்கு போலீஸ் வைத்து வேட்டு..!!
புதுச்சேரியில் ரயில் நிலைய நடைமேடை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒத்திகைப் பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது ரயில் நிலையம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு காவல் துறையினர் சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் குண்டு வீசி இருப்பதை கண்டு அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த பரத் என்பதும், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சவ ஊர்வலத்தில் ஆடியபோது தன்னுடன் தகராறு செய்த ஒருவரை கொலை செய்வதற்காக, பட்டாசுகளை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை சோதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இளைஞர் மீது வழக்குபதிந்த காவல் துறையின அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Discussion about this post