தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம்..
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏழை எளிய மற்றும் நலிவடைந்த இளைஞர்களுக்கு திருமணம் நடத்துவது என தமிழக அரசு அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் 3 ஜோடிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டு வெகு சிறப்பாக திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சி, அருள்மிகு தாந்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற இலவச திருமண திட்டத்தின் நடைபெற்ற திருமணம் விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா, சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..