யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு செக் வைத்த போலீசார்..!!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது.., இளைஞர்களை அதிவேகமாக வாகனம் ஓட்ட தூண்டிவிடுவது, உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் டிடிஎஃப் வாசனை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் அருகே டி.டி.எஃப் வாசன் நேற்று அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒட்டி சாகசம் செய்ய போவதாக நினைத்து.., பாலத்தின் மேல் ஸ்டான்ட் செய்துள்ளார்..,
இதனால் பாலத்தை தாண்டி அவர் பைக் பறந்து சென்று சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது.
இதனால் டிடிஎஃப் வாசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.., கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போல.., அதையும் அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது இளைஞர்களை தூண்டும் செயல் என பெற்றோர்கள் பலரும் புகார் அளித்த நிலையில்.., டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Discussion about this post