நடிகர் விஜய் ஆண்டனியின் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. விஜய் நடித்த சுக்கிரன் திரைப்படத்திற்கு இசையமைத்ததின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து ‘டிஷ்யூம்’,‘நான் அவன் இல்லை’, ‘வேட்டைக்காரன்’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.