குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவதால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பாஜக வின் முக்கிய தலைவர்கள் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர் அதில், பிரதமர் மோடி அருகில் ஒரு சிறுமி நின்று கொண்டு மோடியின் ஆட்சியை பற்றி விளக்குவது போன்ற காட்சிகள் இருந்தது இந்த விடீயோவையே மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
This is blatant but EC and NCPCR will do NOTHING https://t.co/b15uNl3W52
— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 21, 2022
இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு சிறுமியை பிரதமர் பயன்படுத்தியுள்ளார் இது சட்டத்தை மீறும் செயலாகும், தேர்தல் ஆணையம் எங்கே.? தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எங்கே.? என்று தனது ட்விட்டேர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இது போன்று பல தலைவர்கள் இந்த செயலை கண்டித்து வருகின்றனர்.