இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது இதனால் அங்கு வாழும் மக்களுக்கு உயிர்சேதங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்களில் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருக்கிறது இதனாலதான் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 160 தாண்டியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். 2000 கும் மேற்பட்ட வெடிகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு இந்தியா பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அதில், இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பல உயிரிழந்துள்ளதை அறிந்து வேதனை அடைந்தேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.