முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்..!! அடுத்த முதலமைச்சர் உடனடி தேர்வு..!!
அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
அரவிந்த் கெஜ்ரிவால் கைது :
கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் சிறைகாலத்திலேயே கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் மாதம 26ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.,
அதனை தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 10 ம் தேதி டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செப்டம்பர் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது..
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் :
அதன் பேரில் கடந்த செப்டம்பர் 13ம தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.. “சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்றும் குற்றபத்திரிக்கையில் சரியான ஆதாரங்கள் இல்லை என்றும் நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக ஒருவரின் சுதந்திரத்தை பறிப்பதாகும்” என கூறி ஜாமீன் வழங்கினார்..
பதவி ராஜினாமா :
ஜாமினில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசினார்., அப்போது அவர் பேசியதாவது “இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்வேன்.. “மக்கள் தன்னை நேர்மையானவன் எனக் கருதி மீண்டும் வெற்றி பெற செய்தால் மட்டுமே, முதல்வராவேன்” என கூறியிருந்தார்.
டெல்லி புதிய முதலமைச்சர் :
டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய உள்ள நிலையில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் அதிஷி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..